×

யோகி பாபுவின் கஜானா

திகில், காமெடி நிறைந்த சாகச திரைப்படமாக உருவாகி வருகிறது கஜானா. போர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் சார்பில் பிரபாதிஸ் சாம்ஸ் பிரமாண்டமான முறையில் இப்படத்தை தயாரிப்பதோடு,படத்தின் கதையும் அவரே எழுதியுள்ளார்.ஜோதிகா நடித்த ’ராட்சசி’ பட இயக்குநர் சை.கெளதம் ராஜ் திரைக்கதை, வசனம் எழுத, அறிமுக இயக்குநர் யாசின் இயக்குகிறார்.

இயக்குநர் வேலுபிரபாகரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குனர் யாசின் கூறியதாவது: 700 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் பேரரசர் ஒருவரால் புதைக்கப்பட்ட பிரம்மாண்ட கஜானாவை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கும் இளைஞர்களின் சாகசப் பயணத்தையும், அந்த கஜனாவை காப்பாற்றும் பேய்களின் அட்டகாசங்களையும், பொழுதுபோக்கு அம்சங்களுடன், திகில் மற்றும் காமெடியோடு சொல்லும் படம்.

கலகலப்பான காமெடி படமாக இருந்தாலும், தொழில்நுட்ப ரீதியாகவும் படம் கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். தற்போது இறுதிக்கட்ட பணியில் இருக்கும் கஜானா 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளது. என்றார்.

Tags : Yogi Babu ,
× RELATED 2 கோடி பார்வைகளை தொட்ட கங்குவா