×

58 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு: அமைச்சர் சக்கரபாணி தகவல்

தஞ்சை: டெல்டா மாவட்டங்கள் உட்பட மாநிலம் முழுவதும் 58 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தஞ்சை பிள்ளையார்ப்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் கட்டப்பட்டு வரும் நெல் சேமிப்பு கிடங்கை தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து மழை நீரால் நெல் மூட்டைகள் நனையாமல் பாதுகாக்க, இரும்பு மேற்கூரைகள் அமைக்கும் பணியை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்:சம்பா நெல் கொள்முதலுக்காக தமிழ்நாடு முழுவதும் 3,000 கொள்முதல் நிலையங்கள் உடனடியாக திறக்கப்பட உள்ளது. ரூ.238 கோடியில் 20 இடங்களில் இரும்பு மேற்கூரையுடன் கூடிய நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கு உணவு மானியமாக ரூ.5,120 கோடியை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. மீதமுள்ள ரூ.6,813 கோடி மானிய தொகையை பெற துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறுவை பருவத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கான உணவு மானியத்தில் 6813 கோடி மத்திய அரசு பாக்கி வைத்துள்ளது.இந்த ஆண்டு குறுவை பருவத்தில் 8,54,000 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. 1,50,000 மெட்ரிக் டன் நெல் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சம்பா பருவத்தில் 58 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, மேற்கூரை மூடிய நெல் சேமிப்பு கிடங்கு திறக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்….

The post 58 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு: அமைச்சர் சக்கரபாணி தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Chirabani ,Anjai ,Chirapani ,
× RELATED 40க்கு 40 என்ற சபதத்தை முதல்வர்...