×

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட 200 இருளர் குடும்பத்துக்கு நிவாரண உதவிகள்

காஞ்சிபுரம்: மாண்டஸ் புயல்மழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்பட்டனர். இதுபோல் இருளர் இன மக்களும் பாதிப்புக்குள்ளாகினர். மழையால் பாதிக்கப்பட்ட இருளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில், மாவட்ட கலெக்டர் ஆத்திரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கலெக்டர், இருளர்களுக்கு நிவாரண உதவி வழங்க ஏற்பாடு  செய்தார்.  அதன்படி நிவாரண பொருட்கள் தமிழ்நாடு விவசாய நலச்சங்கம் மற்றும் மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.இதையடுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் நேரு, சி.சங்கர் மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட தலைவர் கே.செல்வம், மாவட்ட செயலாளர் எல்.முருகேசன், மாவட்ட பொருளாளர் எஸ்.சீனு ஆகியோர், நிவாரண பொருட்களை காஞ்சிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய 200க்கும் மேற்பட்ட இருளர் குடும்பங்களுக்கு அரிசி மற்றும் 25 பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினர். இதுபோல் கீழ்க்கதிர்பூர், பூக்கடைச்சத்திரம்,  ஒலிமுகமதுப்பேட்டை உள்ளிட்ட பகுதி மக்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது….

The post மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட 200 இருளர் குடும்பத்துக்கு நிவாரண உதவிகள் appeared first on Dinakaran.

Tags : Cyclone Mandus ,Kanchipuram ,Kanchipuram district ,Mondus ,Irula ,Mondus storm ,Dinakaran ,
× RELATED கோடை வெப்ப நோய்களை எதிர்கொள்ள...