×

சிம்பு ஜோடியாக அதிதி

ஜீவா நடித்த ‘ரௌத்திரம்’, விஜய் சேதுபதி நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, கார்த்தி நடித்த ‘காஷ்மோரா’, விஜய் சேதுபதி நடித்த    ‘ஜூங்கா’, கீர்த்தி பாண்டியன் நடித்த ‘அன்பிற்கினியாள்’ ஆகிய படங்களை இயக்கிய கோகுல், அடுத்து ‘கொரோனா குமார்’ என்ற படத்தை இயக்குகிறார். இதில் சந்தானம் ஹீரோவாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை, தற்போது சிம்பு நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்துக்காக சிம்பு ஒரு பாடலைப் பாடி வெளியிட்டிருந்தார். இந்நிலையில், சிம்பு ஜோடியாக இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் ‘விருமன்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் அதிதி, சமீபத்தில் எம்பிபிஎஸ் படித்து முடித்து டாக்டர் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Aditi ,Simbu ,
× RELATED அதிதியுடன் திருமணம் எப்போது? சித்தார்த் பதில்