×

இத்தாலி வெனிஸில் அஜித் குமாருக்கு ஜென்டில்மேன் டிரைவர் விருது

வெனிஸ்: தமிழ் படவுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார், தற்போது கார் பந்தயத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்காக அஜித் குமார் ரேஸிங் அணியை உருவாக்கியுள்ளார். ஒன்றிய அரசு வழங்கிய பத்ம பூஷண் விருது பெற்றிருந்த அவர், தற்போது எஸ்ஆர்ஓ மோட்டார் ஸ்போர்ட் குழுமம் வழங்கிய, இந்த ஆண்டின் ‘ஜென்டில்மேன் டிரைவர்’ விருது பெற்றார்.

இத்தாலி வெனிஸ் நகரில் நடந்த விழாவுக்கு குடும்பத்துடன் சென்று விருது பெற்ற அஜித் குமார் பேசியதாவது:
இந்த விருதை இங்கு பெறுவதில் அதிக மகிழ்ச்சி அடைகிறேன். ரேஸர் பிலிப் சாரியோலை நினைவுகூற விரும்புகிறேன். அன்பான, அற்புதமான மனிதரான அவர் பலபேருக்கு நல்ல ஊக்கம் அளித்திருக்கிறார். மோட்டார் ஸ்போர்ட் உலகில் எனது அனுபவம் மாபெரும் சவாலாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.

எனது குழுவினருக்கும், குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும் நன்றி. மோட்டார் ஸ்போர்ட்டை அடையாளப்படுத்த தொடங்கியுள்ள மீடியாவுக்கு நன்றி. இ்ங்கு நான் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். இந்தியாவுக்கும் இதுபோன்ற ரேஸிங் சீரிஸ்களை கொண்டு வருவீர்கள் என்று நான் நம்புகிறேன். இதுபோன்ற சீரிஸ்களை நடத்துவதற்கு அதிக ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்தியாவும் இந்த மோட்டார் ஸ்போர்ட்டில் சர்வதேச அளவில் சாதனை படைக்கும் என்று நம்புகிறேன்.

Tags : Ajith Kumar ,Venice, Italy ,Venice ,Union Government ,SRO Motor Sport Group ,
× RELATED திருமண தகவலை மறுக்காத ராஷ்மிகா