×

மாண்டஸ் புயல், காரணமாக சேதம் அடைந்த மாற்றுத்திறனாளிக்கான பாதையை சீரமைக்கும் பணி தொடங்கியது

சென்னை: மாண்டஸ் புயலால் சேதம் அடைந்த மாற்றுத்திறனாளிக்கான, சென்னை மெரினா கடற்கரை சிறப்பு பாதையை சீரமைக்கும் பணிகள் தொடங்கியது. தமிழ்நாட்டில் முதல்முறையாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயன்படுத்தும் வகையிலான சிறப்பு பாதையை சென்னை மாநகராச்சி நிருவாகம் அமைத்துக்கொடுத்துள்ளது. சுமார் ரூ. 1 கோடி செலவிலான அமைக்கப்பட்டு கடந்த 27-ம் தேதி மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்காக இது திறந்து வைக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் கடந்த வரம் ஏற்பட்ட மாண்டஸ் புயல் மற்றும் அதன்காரணமாக ஏற்பட்ட கடல் அரிப்பினால் இந்த மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பாதைகள் சேதம் அடைந்துள்ளது. இந்த சூழலில் விரைவில் சீரமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு திறந்துவைக்கப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்திருந்தார். இந்த சூழலில் இன்றைய தினம் மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு பாதையை சீரமைக்கும் பணி என்பது தற்பொழுது தொடங்கியுள்ளது. மேலும் இந்த பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையிலான உறுதியான சிறப்பு பாதையை செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் எனவும் திறந்துவைக்கப்படும் எனவும் சென்னை மாநகராச்சி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 3 மீட்டர் அக்காலத்திலும், கடற்கரை சர்விஸ் சாலையில் இருந்து கடற்கரை அலை வரை மாற்றுத்திறனாளிகள் சென்று திரும்பும் வரை இந்த சிறப்பு பாதை அமைக்கப்பட்டிருந்தது. மேலும் புயல் காரணமாகவும் அதனால் ஏற்பட்ட கடல் சீற்றம் மற்றும் கடல் அரிப்பு காரணமாகவும், சிறப்பு பாதை சேதம் அடைந்துள்ளது. இந்நிலையில், தற்பொழுது சீரமைக்கும் பணிகளை சென்னை மாநகராச்சி நிருவாகம் தொடங்கியுள்ளது. சீரமைக்கும் பணி விரைந்து முடிக்கப்பட்டு, மீண்டும் திறந்துவைக்கப்படும் என்று சென்னை மாநகராச்சி தகவல் தெரிவித்துள்ளது. …

The post மாண்டஸ் புயல், காரணமாக சேதம் அடைந்த மாற்றுத்திறனாளிக்கான பாதையை சீரமைக்கும் பணி தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Cyclone Mandus ,CHENNAI ,Chennai Marina Beach Special Path ,Cyclone ,Mandus ,Tamilnadu ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...