×

கல்வராயன்மலையில் 10 ஏக்கர் மரவள்ளி கிழங்கு மழைநீரில் அடித்து செல்லப்பட்டது: நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

கல்வராயன்மலை: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை வட்டம் வெள்ளிமலை ஒன்றியத்தில் 15 ஊராட்சிகள் உள்ளது. அதில்  வஞ்சிக்குழி ஊராட்சியில்  10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. அதில் ஒரு பகுதியான சீவாத்துமூலை  என்ற கிராமத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இங்கே விளைவிக்கும்  மரவள்ளி, தக்காளி பீன்ஸ், அவரை வெண்டை, ஆகியவற்றை 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள  சங்கராபுரம் சந்தைக்கு எடுத்து செல்ல வேண்டும். சிவாத்து மூலை கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி மகன் சிலம்பரசன், சீனுமகன் மணி, லட்சுமணன் மகன் அருள் , வட்டன், ஆகிய நான்கு பேரும் மரவள்ளிகிழங்கு சாகுபடி செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கல்வராயன்மலையில் பலத்த இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ததால்  சிவாத்துமூலை  கிராமத்தில்  10 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த மரவள்ளி கிழங்கு நீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டது.இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து  எங்களுக்கு தேவையான நிவாரணம்  வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளனர். …

The post கல்வராயன்மலையில் 10 ஏக்கர் மரவள்ளி கிழங்கு மழைநீரில் அடித்து செல்லப்பட்டது: நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kalvarayanmalai ,Vellimalai ,Kallakurichi district ,Vanchikuzhi ,Dinakaran ,
× RELATED நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது