×

சினிமாவில் வடக்கு, தெற்கு பிரிவினைக்கு தனுஷ் எதிர்ப்பு

சென்னை: சினிமாவில் வடக்கு, தெற்கு பிரிவினையை தான் எதிர்ப்பதாக தனுஷ் கூறியுள்ளார். நடிகர் தனுஷ் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது அவர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அக்‌ஷய் குமார்,  சாரா அலி கான் ஆகியோருடன் அத்ரங்கி ரே என்ற படத்தில் நடித்துள்ளார். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற 24ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தமிழில் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் வெளியாகிறது. படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் தனுஷ், இந்திய படங்களை வடக்கு, ெதற்கு என்று பிரிப்பதை நான் எதிர்க்கிறேன். என்று கூறியுள்ளார். 

அவர் மேலும் கூறியிருப்பதாவது: இந்தியத் திரைப்படங்களை வடக்கு, தெற்கு என்று பிரிப்பதை நான் எப்போதும் எதிர்க்கிறேன். அனைத்தும் இந்தியப் படங்கள் என்றே அழைக்கப்பட வேண்டும். 
தற்போது தென்னிந்தியத் திரைப்படங்கள் உலக அளவில் பிரபலமாவது மிகவும் ஆரோக்கியமானது. அந்த மாற்றத்தை நோக்கி நாம் வேகமாகச் சென்று கொண்டிருக்கிறோம். இதனை முதலில் செய்தவர் ரஜினிகாந்த், அவருக்கு ஜப்பான், கனடா, அமெரிக்கா என அனைத்து நாடுகளிலும் ரசிகர்கள் உண்டு. அவருக்குப் பிறகு பாகுபலி படம் இதனை விரிவுபடுத்தி உள்ளது. என்றார்.

Tags : Dhanush ,
× RELATED தரக்குறைவான விமர்சனம் விழாவை புறக்கணித்த அனுபமா