×

சட்டவிரோத வெளிநாட்டு முதலீடு: நடிகை ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன் ஆஜாராக அமலாக்கத்துறை சம்மன்

மும்பை: சட்டவிரோத வெளிநாட்டு முதலீட்டு தொடர்பாக பனாமா பேப்பர் லீக் விவகாரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு சம்மன் அனுப்பியுள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டு சட்டவிரோதமாக வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளவர்களின் பட்டியல் பனாமா ஆவணம் என்ற பெயரில் வெளியானது.

இதில் பல நாடுகளில் உள்ள முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இதில் நடிகை ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன் உள்ளிட்ட 500 இந்தியர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் பகுதி 37-ன் கீழ், நடிகை ஐஸ்வர்யா ராய் ஆஜாராக வேண்டும் என அமலாக்கத்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளதாகவும், இது தொடர்பாக அவர் 15 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

Tags : Aishwarya Rai ,Amitabh Bachchan ,Enforcement Department ,Azhar ,
× RELATED அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அட்மிட்