×

இடஒதுக்கீடுக்கு எதிரான மனு தள்ளுபடி

புதுடெல்லி: சட்டக் கல்லூரி மாணவரான சிவானி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில்,‘‘இடஒதுக்கீடு முறை பாகுபாட்டை ஊக்குவிப்பது என்பது ஜாதிய கட்டமைப்பை வலுப்படுத்துவதாக இருக்கிறது என தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்போது, சட்ட மாணவர் தாக்கல் செய்துள்ள இந்த மனு என்பது விளம்பரத்திற்கு தாக்கல் செய்துள்ளது போன்று இருக்கிறது. இதில் பொதுநலம் இருப்பதாக நீதிமன்றத்திற்கு தெரியவில்லை. இதில் மனுதாரர் தாக்கல் செய்துள்ள மனுவை திரும்பப்பெறவில்லை என்றால் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து வழக்கை தள்ளுபடி செய்தார். இதையடுத்து மனு வாபஸ் பெறப்பட்டது….

The post இடஒதுக்கீடுக்கு எதிரான மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Sivani ,Supreme Court ,
× RELATED யூடியூபர் சங்கர் வழக்கு விவகாரம்;...