×

லைகர் வெளியீட்டு தேதி அறிவிப்பு

உலக குத்துச்சண்டை சேம்பியன் மைக் டைசன் நடிக்கும் முதல் இந்திய படம் லைகர். கரண் ஜோஹர், பூரி ஜெகன்நாத், நடிகை சார்மி இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். அவரது பயிற்சியாளராக மைக் டைசன் நடிக்கிறார்.

அனன்யா பாண்டே நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை பூரி ஜெகன்நாத் இயக்கி வருகிறார். இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Tags : Liger ,
× RELATED சிரஞ்சீவி படத்தில் நடிகரான இயக்குனர்