சமந்தாவுடன் இணைந்த வரலட்சுமி

பிரபல தெலுங்கு இயக்குனர் ஹரிஷ் இயக்கும் யசோதா படத்தில் சமந்தா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகிறது. ஸ்ரீதேவி மூவீஸ் நிறுவனம் யசோதா படத்தை தயாரிக்கிறது. படத்திற்கு மணிசர்மா இசையமைக்கிறார். இந்த படத்தில் தற்போது வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார்.

அவர் மதுபாலா என்ற கேரக்டரில் நடிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஹைதராபாத்தில் நடந்து வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் வரலட்சுமி. படப்பிடிப்பு தளத்தில் எடுத்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டு தான் யசோதா படத்தில் நடிப்பதை அறிவித்திருக்கிறார் வரலட்சுமி.

Related Stories: