பத்திரிகையாளராக நடிக்கும் பிரியா பவானி சங்கர்

ஓடிடி தளத்திற்காக தயாராகும் படம் பிளட் மணி. இதில் பிரியா பவானி சங்கர் சோலோ ஹீரோயினாக நடிக்கிறார். சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான இதில் அவர் பத்திரிகையாளராக நடிக்கிறார். அவருடன் கிஷோர், ஷிரிஷ் முக்கிய  பஞ்சு சுப்பு, வினோத் சாகர் ஶ்ரீலேகா ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சர்ஜுன் இயக்கி உள்ளார்.

படத்தில் நடித்திருப்பது பற்றி பிரியா பவானி சங்கர் கூறியிருப்பதாவது: ப்ளட் மணி' படத்தில் நான் ஒரு உணர்ச்சிகரமான பத்திரிக்கையாளராக நடிக்கிறேன்.  வாழ்க்கை ஒரு வட்டம் என்பது போல பத்திரிக்கையாளராக வாழ்க்கையை ஆரம்பித்த நான் இப்படத்தில் பத்திரிக்கையாளராக நடிக்கிறேன். பல ஆச்சர்யங்களும், திருப்பங்களும் நிறைந்த, இந்த அற்புதமான சஸ்பென்ஸ் டிராமா படத்தில் நானும் பங்கேற்றிருப்பது மிகப்பெரும் மகிழ்ச்சி. என்கிறார்.

Related Stories: