×

ஈரானில் தொடரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேருக்கு ஈரான் அரசு மரண தண்டனை விதிப்பு: அமெரிக்கா கண்டனம்…

தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேருக்கு அரசு மரண தண்டனையை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானில் செப்டம்பர் மாதம் ஹிஜாப் சரியாக அணியாத இளம்பெண் மாஷா அமினி எதிராக தொடர் போராட்டம் நடத்து வருகிறது. இதற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களையும் ஈரானிய படைகள் கண்மூடித்தனமாக தாக்கி வருகின்றனர்.இதில் 200-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ள நிலையில் 15,000 அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் இரு இளைஞர்களை ஈரானிய அரசு பொது வெளியில் தூக்கிலிட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து பொதுமக்கள் சாலையில் இறங்கியுள்ள நிலையில் அங்கு 21 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சொந்த மக்களுக்கு எதிராக ஈரான் பயப்படுகிறது என கூறியிருக்கும் அமெரிக்கா ஈரானின் கொடூரமான செயலை வலுவாக எதிர்பதாக தெரிவித்துள்ளது. …

The post ஈரானில் தொடரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேருக்கு ஈரான் அரசு மரண தண்டனை விதிப்பு: அமெரிக்கா கண்டனம்… appeared first on Dinakaran.

Tags : government ,hijab ,Iran ,America ,Tehran ,Iran government ,
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...