ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் அதுல்யா

அதுல்யா ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் முருங்கைக்காய் சிப்ஸ். இதில் சாந்தனுவுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்து ரசிகர்களை கிறங்கடித்தார் அதுல்யா. இந்நிலையில் இளம் ஹீரோ ஹரீஷ் கல்யாண் ஜோடியாக அவர் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடங்காதே படத்தை இயக்கியவர் சண்முகம் முத்துசாமி. அவர்தான் இந்த படத்தை இயக்குகிறார். வடசென்னையில் நடக்கும் காதல், ஆக்‌ஷன் கலந்த படமாக இது உருவாகிறது. யோகிபாபு காமெடி வேடத்தில் நடிக்கிறார். ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

Related Stories: