×

தென்காசி அருகே செக்கு எண்ணெய் விற்பனை அமோகம்: குறைந்தளவு தேங்காய், கடலை கொடுத்தாலும் எண்ணெய் கிடைக்கும்..!

தென்காசி: தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் செக்கு மூலம் தயாராகும் எண்ணெய்க்கு மவுசு அதிகரித்துள்ளது. செக்கில் ஆட்டிய எண்ணெய் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதால், செக்கு எண்ணெய் விற்பனை அமோகமாக நடைபெற்றுவருகிறது. உடலுக்கு கேடு விளைவிக்காத சமையல் எண்ணெய்களை பயன்படுத்த வேண்டும் என்ற உணர்வு மக்களிடயே ஏற்பட்டுள்ளது. இதனால் பாட்டில்களில் அடைக்கப்பட்டு கடைகளில் விற்கப்படும் எண்ணெய்களை விட செக்கில் அவ்வப்போது ஆட்டி விற்கப்படும் எண்ணெய்க்கு மவுசு அதிகரித்துள்ளது. இதனால் தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் செக்கு எண்ணெய் உற்பத்தி அதிகரித்துள்ளது. பழங்காலத்தில் மாடுகளை வைத்து செக்குகளை சுழல வைத்து எண்ணெய் தயாரித்து வந்த நிலையில் தற்போது மின்மோட்டார்கள் பயன்படுத்தப்படுகின்றன. நல்லெண்ணெய், கடலை எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகிய மூன்றுமே இங்கு பிரதானமாக உற்பத்தி செய்யபடுகிறது. பெரிய அளவில் மட்டுமின்றி குறைந்த அளவில் தேங்காய், நிலக்கடலை, எள் ஆகியவற்றை கொண்டு வந்து கொடுத்தாலும் எண்ணெய்யாக செக்கில் ஆட்டி தரப்படுகிறது. நகர்ப்புறங்களை தொடர்ந்து கிராமப்புற மக்களும் செக்கு எண்ணெய்யை பயன்படுத்த ஆர்வம் காட்டுவதால் தென்காசி சுற்றுவட்டாரத்தில் செக்கு எண்ணெய்க்கு விற்பனை அதிகரித்துள்ளது. மேலும் ஆர்டரின் பேரில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் எண்ணெய் அனுப்பி வைக்கப்படுகிறது….

The post தென்காசி அருகே செக்கு எண்ணெய் விற்பனை அமோகம்: குறைந்தளவு தேங்காய், கடலை கொடுத்தாலும் எண்ணெய் கிடைக்கும்..! appeared first on Dinakaran.

Tags : Chekku ,Tenkasi ,Geezapavoor ,
× RELATED தென்காசி மாவட்டம்; பழைய குற்றால...