×

பாஜக ஆளும் இரு மாநிலங்களான கர்நாடகா – மகாராஷ்டிரா எல்லை பிரச்னை: 2 மாநில முதல்வர்களுடன் அமித் ஷா பேச்சுவார்த்தை

புதுடெல்லி: கர்நாடகா – மகாராஷ்டிரா எல்லை பிரச்னை தொடர்பாக இருமாநில முதல்வர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ஆலோசனை நடத்துகிறார். மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையில் பெலகாவி  என்றும் அழைக்கப்படும் பெல்காம் மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதியை இரு  மாநிலங்களும் உரிமை கோரி வருகின்றன. இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள்  மராத்தி மற்றும் கன்னட மொழிகளைப் பேசுகிறார்கள் என்பதால், இரு  மாநிலங்களுக்குள்ளும் பல ஆண்டாக உரிமை பிரச்னை இருந்து வருகிறது. 1956ம்  ஆண்டில் மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டபோது குறிப்பிட்ட இப்பகுதி  கர்நாடகாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆனால் பிரச்னை தீர்ந்தபாடில்லை.  உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மெஹர் சந்த் மகாஜன் தலைமையிலான  ஆணையம் விசாரணை நடத்தியது. தற்போது இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில்  நிலுவையில் உள்ளது. கர்நாடகாவில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், மீண்டும் எல்லைப் பிரச்னை தலைதூக்கியுள்ளது. இருமாநிலங்களிலும் அரசியல் ரீதியான பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன. மேற்கண்ட இரு மாநிலங்களிலும் பாஜக மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடப்பதால், இப்பிரச்னையை கையாள்வதில் பாஜக தலைமை மிகவும் எச்சரிக்கையாக உள்ளது. இந்நிலையில், கர்நாடகா – மகாராஷ்டிரா எல்ைல பிரச்னை தொடர்பாக இரு மாநில முதல்வர்கள் இடையே உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ஆலோசனை நடத்துகிறார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இன்றைய ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது….

The post பாஜக ஆளும் இரு மாநிலங்களான கர்நாடகா – மகாராஷ்டிரா எல்லை பிரச்னை: 2 மாநில முதல்வர்களுடன் அமித் ஷா பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : Amit Shah ,Chief of State ,Karnataka ,Maharashtra ,New Delhi ,Home Minister ,Karnataga- ,Bajak ,Dinakaran ,
× RELATED பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்க...