×

அருணாச்சலப் பிரதேச எல்லை விவகாரம்; காங்கிரசை விமர்சித்த சினிமா தயாரிப்பாளர்: சமூக ஊடகங்களில் காரசார மோதல்

புதுடெல்லி: தவாங் செக்டர் ேமாதல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை சினிமா தயாரிப்பாளர் அசோக் பண்டிட் விமர்சித்துள்ள நிலையில், அவருக்கு எதிராக பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டரில் இந்திய மற்றும் சீன வீரர்களுக்கு இடையிலான மோதல் பிரச்னையில் ஆளும் பாஜக – எதிர்கட்சிகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டன. அதே நேரத்தில், சமூக ஊடகங்களிலும் பல்வேறு கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன. பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் அசோக் பண்டிட் வெளியிட்ட பதிவில், ‘கடந்த காலங்களில் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் சீனத் தலைவர்களை எதற்காக ரகசியமாக சந்தித்தார்கள் என்பதை காங்கிரஸ் தலைவர்கள் தெரிவிக்க வேண்டும். இந்திய – சீன மோதல்கள் ஏற்படும் போதெல்லாம், சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளராக காங்கிரஸ் செயல்படுகிறது. இந்திய வீரர்களின் திறன் குறித்து கேள்விகளை எழுப்புகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். இவரது பதிவுக்கும் சிலர் எதிர்வினை ஆற்றி வருகின்றனர். …

The post அருணாச்சலப் பிரதேச எல்லை விவகாரம்; காங்கிரசை விமர்சித்த சினிமா தயாரிப்பாளர்: சமூக ஊடகங்களில் காரசார மோதல் appeared first on Dinakaran.

Tags : Arunachal Pradesh ,Congress ,New Delhi ,Ashok Pandit ,Congress party ,Tawang Sector Yematal ,
× RELATED அருணாச்சல் முதல்வருக்கு என்சிபி எம்எல்ஏக்கள் ஆதரவு