ஆன்டி இண்டியனுக்கு சிங்கப்பூரில் தடை

அறிமுக இயக்குனர் இளமாறன் இயக்கிய ஆன்டி இண்டியன் படம் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படம் பெரும் போராட்டதுக்கு பிறகே தணிக்கை சான்றிதழ் பெற்றது. மதங்கள், அரசியல் கட்சிகள், அரசுகளை இந்த படம் சகட்டுமேனிக்கு அவதூறு செய்வதாக படத்திற்கு தணிக்கை சான்றிதழ் மறுக்கப்பட்டது. பின்னர் டிரிபியூனலுக்கு சென்று சான்றிதழ் பெற்றனர்.

இந்த படத்தை சிங்கப்பூரில் வெளியிட வசதியாக அந்த நாட்டு தணிக்கைக்கு படத்தை காண்பித்தனர். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் மதத்தை அவதூறு செய்வதால் சான்றிதழ் தர மறுத்துவிட்டார்கள். என்றாலும் தயாரிப்பு தரப்பு மேல்முறையீடு செய்திருக்கிறது.

Related Stories: