நாய் சேகர் படப்பிடிப்பு தொடங்கியது

வடிவேலு நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்கும் படம் நாய்சேகர் ரிட்டர்ன். லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் இப்படத்தை தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசை அமைக்கிறார். சுராஜ் இயக்குகிறார். தலைப்பு உள்ளிட்ட சில பிரச்சினைகளால் தள்ளிப்போன இந்த படத்தின் படப்பிடிப்புகள் நேற்று பூஜையுடன் தொடங்கியது.

இதில் முதலில் வடிவேலு தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி அறிவிக்க இருக்கிறார்கள்.

Related Stories: