கே.ஜி.எப் டப்பிங் பணிகளை முடித்த சஞ்சய் தத்

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018ம் ஆண்டு வெளியான படம் கே.ஜி.எஃப் கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார்.'

இந்த நிலையில் தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. இப்படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா, பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட 5 மொழிகளில் வருகிற ஏப்ரல் 14ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் அதீரா என்ற வில்லன் கேரக்டரில் நடித்துள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தனது டப்பிங்கை பணியை முடித்துள்ளார்.

Related Stories: