×

மகள்கள் விருப்ப்படிதான் நடிக்கிறார்கள்: ஜீவிதா

கவுதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் இணைந்து நடிக்கும் படம் ஆனந்தம் விளையாடும் வீடு.  இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கியுள்ளார். 40 க்குமேற்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள்.  படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாரகியுள்ளது.
இந்த படத்தில் நடிகை ஜீவிதாவின் மகள் ஷிவாத்மிகா அறிமுகமாகிறார்.

மூத்த மகள் ஏற்கெனவே தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.  தன் மகளுக்கு ரசிகர்கள் ஆதரவு தரவேண்டும் என்று ஜீவிதா கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:  இத்தனை வருடங்கள் கழித்து உங்கள் அனைவரையும் என் மகளுடன் சந்திப்பது மகிழ்ச்சி.  என் இரண்டு மகள்களும் படத்தில் நடிக்கிறார்கள் அவர்களுக்கு பிடித்த வேலையை செய்கிறார்கள். என் இளைய மகள் ஷிவாத்மிகா இப்படத்தில் அறிமுகமாகிறார் அவளுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள். படப்பிடிப்பில் அனைவரும் அவளை நன்றாக பார்த்து கொண்டதாக சொன்னாள். இந்தப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும். என்றார்.

Tags :
× RELATED யுவன் சங்கர் ராஜாவின் மணி இன் தி பேங்க்