சிம்பு, ஹன்சிகாவின் புது பாட்டு

சிம்பு, ஹன்சிகா இணைந்து நடித்த மஹா படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. மாநாடு படத்துக்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளியாக இருக்கும் படம், மஹா. இதில் ஹன்சிகா ஹீரோயினாக நடிக்கிறார். கவுரவ வேடத்தில் சிம்பு நடித்துள்ளார். படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

‘கெடுத்திட்டியே என்னை கெடுத்திட்டியே

உன் காதலால் என்னை கெடுத்திட்டியே

எடுத்திட்டியே ஐயோ எடுத்திட்டியே’

என்னோட உசுர எடுத்திட்டியே’

என்று தொடங்கும் இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜிப்ரான் இசையில் விவேக் பாடல் வரிகளில் பென்னி தயாள் குரலில் உருவாகிய இந்த பாடல் முதல்முறை கேட்கும்போதே கவர்ந்துவிட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: