×

மணிமுக்தா ஆற்றில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு: மாடு மேய்க்கச் சென்றவர்கள் தவிப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கண்டாச்சிமங்கலம் கிராமத்தில் மாடு மேய்ச்சலுக்காக நேற்று காலை 6 மணியளவில் அதே கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம், வீரமுத்து மற்றும் வீரமுத்துவின் மனைவி உட்பட நான்கு பேரும் சென்ற நிலையில்  மணிமுக்தா ஆற்றில் அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அந்த நான்கு பேரும் வீடு திரும்ப முடியாமல் உண்ண உணவு இன்றி தவித்து வந்தனர். பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் தியாகதுருகம் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த தியாகதுருகம் தீயணைப்புத்துறையினர் நான்கு பேருக்கும் முதற்கட்டமாக உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். தீயணைப்புத்துறையினரின் தீவிர முயற்சியால் முதற்கட்டமாக மாடுகளை மீட்டுள்ளனர். கொட்டும் மழையிலும் தீயணைப்புத்துறையினர் மற்றும் தலைமை காவலர் ஆகியோர் சிக்கியுள்ள அவர்கள் நான்கு பேரையும் கயிறு மூலமாக மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்….

The post மணிமுக்தா ஆற்றில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு: மாடு மேய்க்கச் சென்றவர்கள் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Manimukta River ,Kallakkurichi ,Kandachimangalam ,Kallakkurichi district ,
× RELATED வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட...