×

புதுசேரியில் அரவிந்தரின் 150 வது பிறந்தநாளை ஒட்டி ரூ.150 மதிப்பிலான நாணயத்தை காணொலி காட்சி மூலம் வெளியிட்டார் பிரதமர் மோடி

டெல்லி: ஸ்ரீ அரவிந்தரின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு, நினைவு நாணயம் மற்றும் தபால் தலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் வெளியிட்டார். ஸ்ரீ அரவிந்தரின் வாழ்க்கை ‘ஏக் பாரத், ஷ்ரேஷ்ட பாரத்’ ஆகியவற்றின் பிரதிபலிப்பாகும். அவர் வங்காளத்தில் பிறந்தாலும், தனது வாழ்நாளின் பெரும்பகுதியை குஜராத் மற்றும் புதுச்சேரியில் கழித்தார். அவர் எங்கு சென்றாலும் தனது ஆளுமையின் ஆழமான முத்திரையை பதித்தவர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்வேகம், கடமை, உந்துதல் மற்றும் செயல் ஆகியவை ஒன்றிணைந்தால், சாத்தியமற்ற இலக்குகள் கூட தவிர்க்க முடியாததாகிவிடும். இன்று, நாட்டின் வெற்றிகள், நாட்டின் சாதனைகள் மற்றும் ஆசாதி கா அம்ரித் மோகத்சவின் போது முயற்சிகளை மேற்கொள்வதற்கான அனைவரின் உறுதியும் சான்று: பிரதமர் நரேந்திர மோடி1872-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிறந்த ஸ்ரீ அரவிந்தர், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் தொலைநோக்கு பார்வையுடன் நிலையான பங்களிப்பை அளித்தார். இந்தியாவின் மக்கள், கலாச்சாரம் மற்றும் சாதனைகளின் புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டாடும் விதமாக, விடுதலையின் 75-ஆம் ஆண்டைக் குறிக்கும்  அமிர்தப் பெருவிழா கொண்டாடப்படும் இந்த தருணத்தில், ஸ்ரீ அரவிந்தரின் 150- வது பிறந்த ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாட்டின் பல பகுதிகளில்  ஆண்டு முழுவதும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி, ஸ்ரீ அரவிந்தரின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவுகூரும் நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றார். 75-வது விடுதலைப் பெருவிழாவின் ஒரு பகுதியாக புதுச்சேரி கம்பன் கலை சங்கம் சார்பில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீ அரவிந்தருக்கு பெருமை சேர்க்கும் வகையில், நாணயம் மற்றும் நினைவு தபால் தலையை பிரதமர் வெளியிடுள்ளார். நாடு முழுவதும் ஸ்ரீ அரவிந்தரைப் பின்பற்றுபவர்கள் பங்கேற்றுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்….

The post புதுசேரியில் அரவிந்தரின் 150 வது பிறந்தநாளை ஒட்டி ரூ.150 மதிப்பிலான நாணயத்தை காணொலி காட்சி மூலம் வெளியிட்டார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : Modi ,Aravinda ,Pudusheri ,Delhi ,Narendra Modi ,Sri Aravindar ,PM Modi ,Aravindar ,Pudussery ,
× RELATED என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்: பிரதமர் மோடி