சமந்தாவுக்கு ஷாக் கொடுத்த நயன்தாரா.!

டாப்ஸி நடிப்பில் வெளியான ஹாரர் திரில்லர் படம், கேம் ஓவர். இந்த படத்தை அஸ்வின் சரவணன் இயக்கி இருந்தார். இதுதான் அவருக்கு முதல் படம். இந்த படத்துக்கு பிறகு சமந்தா நடிப்பில் அவர் படம் இயக்குவதாக இருந்தது. இதற்காக சமந்தா கால்ஷீட்டும் ஒதுக்கி இருந்தார். இந்நிலையில் திடீரென சில நாட்களுக்கு முன் கனெக்ட் என்ற படத்தின் விளம்பரம் வெளியானது. இதில் நயன்தாரா நடிப்பதும் படத்தை அஸ்வின் சரவணன் இயக்குவதும் விக்னேஷ் சிவன் தயாரிப்பதும் உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதை பார்த்து சமந்தா அதிர்ச்சி அடைந்தாராம். காரணம், தன்னிடம் இது பற்றி எதுவும் சொல்லாமல், நயன்தாரா படத்தை அஸ்வின் இயக்க சென்றுவிட்டாராம். சமந்தாவுக்கு சொன்ன கதையைதான் அவர் இப்போது நயன்தாராவை வைத்து எடுப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சமந்தாவும் நயன்தாராவும் நல்ல தோழிகள். அவர்களுக்குள் இந்த படம் தொடர்பாக எந்த பிரச்னையும் கிடையாது என கனெக்ட் பட தரப்பு சொல்லி வருகிறது.

Related Stories: