×

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண் எம்பி, எம்எல்ஏக்கள் 15 சதவீதத்திற்கும் குறைவு; ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண் எம்பி, எம்எல்ஏக்களின் பிரதிநிதித்துவம் 15 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா முதன் முதலில் கடந்த 1996ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா 2010ம் ஆண்டு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், 15வது மக்களவை கலைக்கப்பட்ட பிறகு, காலாவதியானது. இந்நிலையில், நாடாளுமன்றம், மாநில சட்டப்பேரவைகளில் பெண் எம்பி, எம்எல்ஏக்களின் பிரதிநிதித்துவம் குறித்து புள்ளி விவரத்தை ஒன்றிய அரசு நேற்று வெளியிட்டது. அதில், நாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவையில் பெண் எம்பிக்களின் பங்கு முறையே 14.94 %  மற்றும் 14.05 % ஆக உள்ளது. பீகார் (10.70%), சட்டீஸ்கர் (14.44), அரியானா (10), ஜார்கண்ட் (12.35), பஞ்சாப் (11.11), ராஜஸ்தான் (12), உத்தரகாண்ட் (11.43), உத்தரபிரதேசம் (11.66), மேற்கு வங்கம் (13.70) மற்றும் டெல்லி (11.43) ஆகிய மாநிலங்களில் 10 சதவீதத்துக்கும் அதிகமான பெண் எம்எல்ஏக்கள் உள்ளனர். இதுதவிர, ஆந்திரா, அசாம், கோவா, குஜராத், இமாச்சலப் பிரதேசம், கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிசா, சிக்கிம், தமிழ்நாடு மற்றும் தெலங்கானாவில் 10 சதவீதத்துக்கும் குறைவாகவே பெண் எம்எல்ஏக்கள் உள்ளனர்.சமீபத்தில் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில், 182 எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அதில் பெண் எம்எல்ஏக்கள் 8.2% மட்டுமே. இமாச்சல பிரதேசத்தில் ஒரே ஒரு பெண் எம்எல்ஏ மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன்படி, சட்டப்பேரவைகளில் பெண் எம்எல்ஏக்களின் சராசரி எண்ணிக்கை 8 சதவீதம் மட்டுமே….

The post நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண் எம்பி, எம்எல்ஏக்கள் 15 சதவீதத்திற்கும் குறைவு; ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Parliament ,Legislative Assemblies ,Union Govt Information ,New Delhi ,Assemblies ,Lok Sabha ,State Legislative Assemblies ,Union Government Information ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் நாடாளுமன்றத் தேர்தல்;...