×

விஜய்யை இயக்க கதை ரெடி; விஷால் அறிவிப்பு

சென்னை: விஷால் நடித்துள்ள முதல் பான் இந்தியா படம், ‘லத்தி’. இதை ஆர்.வினோத் குமார் இயக்கியுள்ளார். விஷால் ஜோடியாக சுனைனா நடித்துள்ளார். ராணா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணா, நந்தா இணைந்து தயாரித்துள்ள இப்படம் வரும் 22ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், ‘மாஸ் டர்’ படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 67வது படத்தில், விஜய்க்கு வில்லனாக விஷால் நடிப் பதாக கூறப்பட்டுள்ள ஒரு தகவலை விஷால் மறுத்துள்ளார். கேங்ஸ்டர் கதை ெகாண்ட இதில், விஜய்க்கு வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார். முன்னதாக விஷாலை  வில்ல னாக நடிக்க வைக்க, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘மார்க் ஆண்டனி’ படத் தின் ஷூட்டிங்கில் விஷாலை லோகேஷ் கனகராஜ் சந்தித்துப் பேசினார். இந்நிலையில், விஜய்யின் 67வது படத்தில் நடிக்க மறுத்ததற்கான நிிஜ காரணத்தை விஷால் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘நான் நடித்த‘லத்தி’ பட ரிலீசுக்குப் பிறகு ‘மார்க் ஆண்டனி’ என்ற பான் இந்தியா படம் ரிலீஸ் ஆகிறது. அடுத்து ‘துப்பறிவாளன் 2’ படத்திலும், கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் ஒரு படத்திலும் நடிக்கிறேன். எனவே, அடுத்த ஆண்டு முழுவதும் நான் பிசியாக இருப்பதால், ‘தளபதி 67’ படத்தில் நடிக்க என்னால் தேதி ஒதுக்க முடியவில்லை. லோகேஷ் என்னை நேரில் சந்தித்தபோது அதுபற்றி சொன்னேன். அவரும் புரிந்துகொண்டார். எதிர்காலத்தில் நான் விஜய்யை சந்தித்து கதை சொல்லி, அது அவருக்குப் பிடித்தி ருந்தால், அவரை வைத்து ஒரு படம் இயக்குவேன்’ என்றார். மிஷ்கின் இயக்கத்தில் அவர் நடித்த ‘துப்பறிவாளன் 2’ படப்பிடிப்பில், கருத்து வேறுபாடு காரணமாக விஷாலை விட்டு மிஷ்கின் பிரிந்து சென்றார். உடனே விஷால் இந்தப் படத்தின் இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார். சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு அவர், நடிகர் அர்ஜூன் இயக்கிய சில படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது….

The post விஜய்யை இயக்க கதை ரெடி; விஷால் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Vijay ,Vishal ,Chennai ,India ,R. Vinod Kumar ,Sunaina ,
× RELATED தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் மோதல்..!!