சல்மான் கான் படத்தில் நோ கிஸ் சீன்..!

55 வயதாகும் சல்மான் கான் திருமணமே செய்யவில்லை. இவருடன் தொடர்பு படுத்தப்படாத ஹீரோயின்கள் பாலிவுட்டில் கிடையாது என்ற குற்றச்சாட்டும் எப்போதும் உண்டு. மாஜி ஹீரோயின் சங்கீதா பிஜ்லானி முதல் தற்போதைய ஹீரோயின் ஜாக்குலைன் பெர்னாண்டஸ் வரை அனைவருடனும் கிசு கிசுக்கப்பட்டவர் சல்மான் கான். அப்படிப்பட்ட சல்மானின் படங்களில் சமீபகாலமாக எந்த முத்தக் காட்சியும் இடம்பெறுவதில்லை. அதேபோல் ஆபாச காட்சிகள் எதுவுமே இருப்பதில்லை.

இதனால் அவரது படங்களை குடும்பத்துடன் ரசிகர்கள் கண்டுகளிக்கின்றனர். சமீபத்தில் அந்திம் என்ற படம் அவரது நடிப்பில் வெளியானது. இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் சல்மான் கான் கூறும்போது, ‘எனது படத்தை நானே குடும்பத்துடன்தான் பார்ப்பேன். அப்படியென்றால் ரசிகர்களும் அதுபோல்தான் பார்க்க விரும்புவேன். அதனால்தான் எனது படங்களில் முத்தக் காட்சிகள் இடம்பெறாது. ஆபாச காட்சிகளுக்கும் இடமிருக்காது. அதை முதலிலே இயக்குனர்களிடம் நான் கறாராக சொல்லிவிடுவேன்’ என்றார்.

Related Stories: