×

இளையராஜாவுக்கு வந்த தன்மான பிரச்சினை.!

காக்கா முட்டை படத்தை இயக்கிய மணிகண்டன் தற்போது இயக்கி உள்ள படம் கடைசி விவசாயி. இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளையராஜா இதுகுறித்து இசை கலைஞர்கள் சங்கத்தில் புகார் செய்தார்.

அவர்கள் விசாரித்ததில் படத்தின் ஒட்டுமொத்த பின்னணி இசையையும் நீக்கிவிட்டு சந்தோஷ் நாராயணணை இசை அமைக்க வைத்திருக்கிறார்கள். இது இளையராஜாவுக்கு தன்மான பிரச்சினையை உருவாக்கி இருக்கிறது. இதில் நல்ல தீர்வு எட்டப்படாவிட்டால் நீதிமன்றவும் செல்ல இளையராஜா தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

Tags : Ilayaraja ,
× RELATED இளையராஜா வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி விலகல்