×

சென்னையில் சிறப்பு தணிக்கை 685 ரவுடிகளை பிடித்து போலீசார் விசாரணை; திருந்தி வாழப்போவதாக 17 பேர் பிணை பத்திரம்

சென்னை: சென்னையில் தொடர் கொலை, அடிதடி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 685 குற்றவாளிகளை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். சென்னையில் கொலை, கொலை முயற்சி, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு சிறையில் இருந்து வெளியே வந்ததுள்ள ரவுடிகளை, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை மாநகர காவல் எல்லையில் உள்ள 12 காவல் மாவட்டத்திலும் நேற்று முன்தினம் இரவு போலீசார் ஒரு நாள் அதிரடி தணிக்கை மேற்கொண்டனர். அதில், கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 685 ரவுடிகளின் வீடுகளுக்கு போலீசார் நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். அதில், பல்வேறு வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த 1 ரவுடி மற்றும் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 4 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். பிடிபட்ட ரடிகளில் 17 பேர், திருந்தி வாழப்போவதாக அந்தந்த துணை கமிஷனர்கள் முன்பு நன்னடத்தை பிணை பத்திரம் எழுதி கொடுத்தனர். மீதமுள்ள ரவுடிகளை போலீசார் கடுமையாக எச்சரித்து எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர். சென்னை மாநகர காவல் எல்லையில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த 2,540 பேர் நன்னடத்தை பிணை ஆணை எழுதி கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது….

The post சென்னையில் சிறப்பு தணிக்கை 685 ரவுடிகளை பிடித்து போலீசார் விசாரணை; திருந்தி வாழப்போவதாக 17 பேர் பிணை பத்திரம் appeared first on Dinakaran.

Tags : Special Audit ,Chennai ,Chennai Special Audit ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...