×

நானும் தப்பு பண்ணியிருக்கேன்: பூர்ணா

கேரளாவில் ஷம்னா காசிம். தமிழில் பூர்ணா. முனியாண்டி விலங்கியல் 3ம் ஆண்டு படத்தின் மூலம் தமிழுக்கு வந்து விஜய் வாயால் குட்டி அசின் என்ற பட்டம் வாங்கியவர்தான். ஆனால் தமிழில் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. தற்போது மிஷ்கினின் பிசாசு 2, அம்மாயி  சில படங்களில் நடித்து வருகிறார்.
தனது சினிமா கேரியர் பற்றி மனம் விட்டு பேசியுள்ள அவர் ஆரம்பகாலத்தில் நானும் தப்பு பண்ணியிருக்கேன் என்று கூறியிருக்கிறார்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது: எனக்கு இந்த ஆண்டு முதல் நல்ல கதாபாத்திரங்கள் வருகின்றன. ஹீரோயினாக மட்டுமே நடிக்க வேண்டும் என நான் முடிவு செய்து வரவில்லை. நான்கைந்து காட்சிகளில் வந்தாலும் நடிப்புக்கு வாய்ப்பு இருக்கும் கதாபாத்திரம் கிடைத்தால் போதும். ஷோபனா, ரேவதி, சுஹாசினி மாதிரி எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் செய்ய வேண்டும் என்ற முடிவோடு வந்தேன்.

சினிமாவுக்கு தனியாக வந்து இத்தனை ஆண்டுகளாக நீடிக்கிறேன். சினிமா கேரியர் நீண்ட காலம் நீடிக்க வேண்டுமென்றால் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சினிமாவிற்கு வந்த புதிதில் நான் சில தவறுகள் செய்தேன். ஆனால் இப்போது ஜாக்கிரதையாக நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். என்கிறார் பூர்ணா.

Tags :
× RELATED அக்கரன் விமர்சனம்