×

பிரதமர் நுண்ணீர் பாசன திட்டத்தை செயல்படுத்த தமிழகம் முதல் தவணையாக ரூ.261.18 கோடி விடுவித்தது: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை: தமிழக வேளாண்மை துறை அமைச்சர் 2022-23ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கலின் போது நுண்ணீர் பாசன திட்டத்தை ஊக்குவித்து அதன் பயன்பாட்டை அதிகரிக்க சிறப்பு கவனம் செலுத்தவுள்ளதாக அறிவித்தார். அதன்படி சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியமும் மற்ற விவசாயிகளுக்கு 75% மானியத்தில் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தை 2.50 லட்சம் ஏக்கர் அளவுக்கு செயல்படுத்த ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இணைந்து ரூ.960 கோடி நிதியை ஒதுக்கும் என்றுஅறிவிக்கப்பட்டது.பிரதமர் நுண்ணீர் பாசன திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசு தரப்பில் மொத்தமாக ரூ.319 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் முதல் தவணையாக ரூ.79.75 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி நிர்வாகம் சார்பில் திட்டத்தை செயல்படுத்த முதல் கட்டமாக ரூ.261.18 கோடி விடுவிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இது குறித்து தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் திட்டத்தை செயல்படுத்த நிதியை விடுவிக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியது. ஒன்றிய அரசின் பங்களிப்பான ரூ.79.75 கோடியும், அதற்கு இணையான மாநில அரசின் பங்களிப்பான 53.17 கோடியும், தமிழக அரசின் கூடுதல் நிதி பங்களிப்பான ரூ.128.26 கோடியுடன் திட்டத்தை செயல்படுத்த 12 சதவீத ஜி.எஸ்.டி-யுடன் சேர்த்து ரூ.261.18 கோடி முதல் தவணை நிதி விடுவிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது….

The post பிரதமர் நுண்ணீர் பாசன திட்டத்தை செயல்படுத்த தமிழகம் முதல் தவணையாக ரூ.261.18 கோடி விடுவித்தது: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,Agriculture Minister ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...