பூஜையுடன் தொடங்கிய ஜி.வி.பிரகாஷின் 'ரிபல்'

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என இரண்டு பணிகளையும் கவனித்து வரும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான ஜெயில் மற்றும் பேச்சுலர் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்த ரிலீசாக உள்ளன. ஏற்கனவே அவர் நடித்த அரை டஜனுக்கும் மேலான படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன என்பதும் ஒரு சில படங்களில் அவர் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது,

இந்த நிலையில் தற்போது ஜிவி பிரகாஷ் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல்ராஜா மற்றும் சிவி குமார் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு ரிபல் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகவிருக்கும் இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

Related Stories:

More