டாப்சியின் ஹாலிவுட் ஆர்வம்

டாப்சிக்கு கிளாமராக நடிப்பதை விட, திறமையான நடிப்பை வெளிப்படுத்தும் கேரக்டர்களில் நடிக்கத்தான் மிகவும் பிடிக்குமாம். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘ஒரு இக்கட்டான காலகட்டத்தில், இனி என்னால் சினிமாவில் நீடிக்க முடியாது என்ற உண்மை புரிந்தது. காரணம், நான் அழகாக இருப்பதாக எல்லோரும் பாராட்டினார்களே தவிர, எனக்குள் என்ன நடிப்புத்திறமை இருக்கிறது என்று யாரும் யோசிக்கவில்லை. அதுபற்றி பேசவும் இல்லை. அப்போது நான் தீவிரமாக யோசித்தபோது ஒரு விடை கிடைத்தது. இனி அந்தந்த படத்தில் ஏற்று நடிக்கும் கேரக்டராகவே நான் தோன்றினால் மட்டுமே நீடித்து நிலைக்க முடியும் என்று.

அதற்குப் பிறகுதான் வித்தியாசமான கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தேன். சினிமா தவிர, பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான வீடியோக்கள் வெளியிடுவதிலும் ஈடுபட்டுள்ளேன். பெண் குழந்தைகளை திடீரென்று பள்ளியில் இருந்து நிறுத்தி விடுவதை தடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளேன்’ என்றார். அவெஞ்சர்ஸ், சூப்பர் ஹீரோ போன்ற ஹாலிவுட் படங்களில் நடிக்கவும் ஆசை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related Stories: