கட்டவுட்டுக்கு ஊற்றும் பாலாபிஷேக பாலை ஏழைக்கு கொடுங்கள்: சல்மான்கான் வேண்டுகோள்

சல்மான் கான் நடித்துள்ள அந்திம்: தி ஃபைனல் ட்ரூத்  கடந்த 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் வெளியான தியேட்டர்களில் சல்மான் கான் ரசிகர்கள் சிலர் பட்டாசுகளை வெடிப்பது, சல்மான் கான் கட்அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்வது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவின. அந்த வீடியோக்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சல்மான் கான், இதுபோன்ற காரியங்களில் ஈடுபட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: திரையரங்கிற்குள் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்று ரசிகர்களைக் கேட்டுக் கொள்கிறேன். அது உங்கள் உயிருக்கும் அடுத்தவர்களின் உயிருக்கும் பெரும் ஆபத்தாய் முடியும். பட்டாசுகளைத் திரையரங்கத்துக்குள் அனுமதிக்க வேண்டாம் என்று திரையரங்க உரிமையாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன். சிலர் தண்ணீர் கூடக் கிடைக்காமல் கஷ்டப்படும்போது நீங்கள் பாலை வீணாக்குகிறீர்கள். பாலைப் பயன்படுத்த விரும்பினால், அதை வாங்க முடியாத ஏழைக் குழந்தைகளுக்கு வழங்குமாறு ரசிகர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.  என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: