×

திருமணத்தை புதுப்பிக்க கஜோல் ஐடியா

பாலிவுட் முன்னணி நடிகையும், நடிகர் அஜய் தேவ்கனை காதல் திருமணம் செய்தவருமான கஜோல் (51), தமிழில் ‘மின்சார கனவு’, ‘வேலையில்லா பட்டதாரி 2’ ஆகிய படங்களில் நடித்தார். அவருக்கு 2 வாரிசுகள் இருக்கின்றனர். திரைப்படங்கள், வெப் தொடர்கள், விளம்பரங்களில் நடித்து வரும் கஜோல், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் திருமண உறவு குறித்து தெரிவித்த கருத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவர் பேசுகையில், ‘இனிமேல் நடக்கும் திருமணங்கள் அனைத்தும் காலாவதி தேதியுடன் நடக்க வேண்டும். திருமணத்தை புதுப்பித்துக்கொள்ளும் முறை செயல்பாட்டுக்கு வரவேண்டும். திருமண உறவு காலாவதி தேதியுடன் இருந்தால்தான் நன்றாக இருக்கும்.

அப்படி நடக்கும்போது, யாருக்கும் எந்தவித தொந்தரவும் இருக்காது. மனக்கஷ்டங்களும் ஏற்படாது’ என்றார். கஜோலின் இக்கருத்து ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அஜய் தேவ்கனை திருமணம் செய்து 26 ஆண்டுகள் ஆகிறது என்பதால், அதில் சலிப்பு ஏற்பட்டுவிட்டதா? அல்லது இருவருக்கும் இடையே பிரச்னையா என்று கேள்வி கேட்டு வருகின்றனர். வேறு சிலர், இந்த ஐடியா நன்றாக இருப்பதாக கலாய்த்து வருகின்றனர்.

Tags : Kajol ,Bollywood ,Ajay Devgan ,
× RELATED குற்றம் புரிந்தவன்: வெப்சீரிஸ் விமர்சனம்