×

திருப்புத்தூர் தென்மாபட்டியில் சாலையில் வீணாக ஓடும் காவிரி குடிநீர்-சரி செய்ய மக்கள் கோரிக்கை

திருப்புத்தூர் : கடந்த 2006-2011ல் திமுக ஆட்சியின் போது திருச்சி-ராமநாதபுரம் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.615 கோடி மதிப்பில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இதில் திருப்புத்தூர் வழியாக வரும் காவிரி குடிநீர் தென்மாபட்டு, ஆத்தங்கரைப்பட்டி, பட்டமங்கலம், செம்பனூர், கல்லல் வழியாக ராமநாதபுரம் வரை செல்கிறது. இதில் ஆங்காங்கே தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் அடைப்பு, நீர் வெளியேறுதல், நீர் குறைவாக வருதல் உள்ளிட்டவை கண்டறியப்படும். பல இடங்களில் ஏற்பட்ட குழாய் பழுதுகளை சில மாதங்களுக்கு முன் சீரமைக்கும் பணிகள் நடந்தது.இந்நிலையில், திருப்புத்தூரில் இருந்து கண்டரமாணிக்கம் செல்லும் ரோட்டில் தென்மாபட்டியில் உள்ள இரண்டாவது பேருந்து நிறுத்தம் நிழற்குடை அருகே மண்ணிற்கு அடியில் புதைக்கப்பட்டுள்ள காவிரி குடிநீர் குழாயில் கடந்த சில நாட்களுக்கு முன் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குழாயில் இருந்து தண்ணீர் கசிந்து வெளியேறி ரோட்டில் காவிரி தண்ணீர் வீணாக செல்கிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பழுது ஏற்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டு சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்….

The post திருப்புத்தூர் தென்மாபட்டியில் சாலையில் வீணாக ஓடும் காவிரி குடிநீர்-சரி செய்ய மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Cauvery ,Tiruputhur Tenmapatti ,Tiruputhur ,DMK ,Tiruchi- ,Ramanathapuram ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டுக்கு 2.5 டிஎம்சி காவிரி நீரை...