×

நெடும்பலம் அரசு விதை பண்ணையில் பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்

திருத்துறைப்பூண்டி : நெடும்பலம் அரசு விதை பண்ணையில் பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக உள்ளனர்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பல் அரசு விதை பண்ணையில் 5 ஏக்கர் நில பரப்பில் மாப்பிள்ளை சம்பா இயந்திரம் மூலம் நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ளது. தூய மல்லி பாரம்பரிய நெல் ரகத்தினை 10 ஏக்கர் பரப்பளவில் இயந்திர நடவு முறையில் செம்மை நெல் சாகுபடி தொழில் நுட்பத்தில் நடவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் கூறுகையில், திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் உள்ள நெடும்பலம், கீராந்தி, தீவாம்பாள்பட்டிணம் ஆகிய அரசு விதை பண்ணைகளில் தலா 15 ஏக்கர் பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை வழியில் சாகுபடி செய்து விதை உற்பத்தி செய்து அதன் மூலம் கிடைக்கும் விதை நெல்லை விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானிய விலையில் வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை திட்டமிட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக நெடும்பலம் அரசு விதை பண்ணையில் 5 ஏக்கர் நில பரப்பில் மாப்பிள்ளை சம்பா இயந்திரம் மூலம் நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக தூய மல்லி பாரம்பரிய நெல் ரகத்தினை 10 ஏக்கர் பரப்பளவில் இயந்திர நடவு முறையில் செம்மை நெல் சாகுபடி தொழில் நுட்பத்தில் நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது பயிர்கள் நன்கு வளர்ந்தள்ளது என்றார்….

The post நெடும்பலம் அரசு விதை பண்ணையில் பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Nedumbalam Government Seed Farm ,Thiruthaurapoondi ,Tiruvarur district ,
× RELATED திருத்துறைப்பூண்டி அருகே...