ஆந்திர வெள்ள நிவாரணத்துக்கு சிரஞ்சீவி, மகேஷ்பாபு ஜூனியர் என்.டி.ஆர் நிதி உதவி

ஆந்திர மாநில அரசு வெள்ள நிவாரண நிதி திரட்டி வருகிறது. இந்த நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆர் 25 லட்சம் ரூபாய் வெள்ள நிவாரண நிதியாக வழங்கி உள்ளார். இதேபோன்று நடிகர் சிரஞ்சிவியும் 25 லட்சம் வழங்கி உள்ளார். ஆந்திரப் பிரதேசத்தில் வெள்ளம் மற்றும் அடைமழையால் ஏற்பட்ட பரவலான பேரழிவு மற்றும் அழிவுகளால் வேதனையடைந்தேன்.

நிவாரணப் பணிகளுக்கு உதவுவதற்காக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சங்களை தாழ்மையான பங்களிப்பாக வழங்குகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இதே போன்று நடிகர் மகேஷ் பாபுவும் 25 லட்சம் வழங்கி இருப்பதோடு இந்த நேரத்தில் அனைவரும் அரசுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Related Stories:

More