×

மரக்காணம் கூலி தொழிலாளி கர்நாடகாவில் மர்ம சாவு: உடலை வாங்க உறவினர்கள் மறுத்ததால் பரபரப்பு

மரக்காணம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சிக்கு உட்பட்ட கலைஞர் நகரை சேர்ந்தவர் அருள் (50), கூலி தொழிலாளி. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அருள் மற்றும் 10 பேர் கரும்பு வெட்டும் கூலி வேலைக்கு கர்நாடகா மாநிலத்திற்கு சென்றுள்ளனர். 2 மாதமாக அங்கேயே தங்கி வேலை செய்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு அருளுக்கு உடல் நிலை சரி இல்லை என்றும் இதனால் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளோம் என அவரது வீட்டிற்கு போன் மூலம் தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் இன்று காலை 5 மணிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அருளின் உடலை அவரது வீட்டிற்கு எடுத்து வந்துள்ளனர். இதனை பார்த்த அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்து கதறினர். ‘அருளின் இறப்பில் மர்மம் உள்ளது. இதனால் நாங்கள் உடலை வாங்க மாட்டோம். அருளை கர்நாடகாவிற்கு வேலைக்கு அழைத்துச் சென்ற ஏஜென்ட் மற்றும் வேலை வாங்கிய உரிமையாளர் இங்கு வரவேண்டும்’ என கூறி ஆம்புலன்ஸை மறித்து கொண்டு உடலை வாங்காமல் மறுத்தனர். சம்பவம் குறித்து அருளின் உறவினர்கள், மரக்காணம் காவல் நிலையம் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இறந்த கூலி தொழிலாளி அருளுக்கு 3 மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது….

The post மரக்காணம் கூலி தொழிலாளி கர்நாடகாவில் மர்ம சாவு: உடலை வாங்க உறவினர்கள் மறுத்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Marakanam ,Kalain Nagar ,Villupuram district ,Dinakaran ,
× RELATED மரக்காணம் அருகே கடலில் பைபர் படகு கவிழ்ந்து மீனவர் மாயம்