×

சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை; தந்தையும், சகோதரியும் நலம்: பீகார் திரும்பிய தேஜஸ்வி பேட்டி

பாட்னா: சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட தந்ைதயும், அவருக்கு சிறுநீரகம் தானம் கொடுத்த எனது சகோதரியும் நலமாக இருப்பதாக தேஜஸ்வி யாதவ் கூறினார். பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவின் தந்தையான முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக கடந்த சில வாரங்களுக்கு முன் சிங்கப்பூர் சென்றார். அவருக்கு அங்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது மகள் ரோகினி ஆச்சார்யா தனது ஒரு சிறுநீரகத்தை தனது தந்தைக்கு தானமாக வழங்கினார். தனது தந்தையின் அறுவை சிகிச்சைக்காக பீகாரில் இருந்து தேஜஸ்வி யாதவும் சென்றிருந்தார். தற்போது அவர் பாட்னா திரும்பிய நிலையில், நிருபர்களிடம் கூறுகையில், ‘தற்போது லாலு பிரசாத்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது கிட்னியும் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. தந்தைக்கு சிறுநீரக தானம் வழங்கிய எனது சகோதரி ரோகினி ஆச்சார்யாவும் நலமாக உள்ளார். பீகாரின் குட்னி இடைத்தேர்தலில் எங்களது கட்சி தோல்வி அடைந்துவிட்டது. உள்ளூர் பிரச்னைகளால் தோல்வியை சந்திக்க நேரிட்டது. இமாச்சல் மற்றும் டெல்லி மாநகராட்சி தேர்தல்களில் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது. குட்னி தொகுதியில் மட்டுமே நாங்கள் தோல்வியடைந்தோம்; ஆனால் பெரும்பாலான இடங்களில் நடந்த இடைத்தேர்தலில் பாஜக தோல்வியடைந்துள்ளது’ என்றார்….

The post சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை; தந்தையும், சகோதரியும் நலம்: பீகார் திரும்பிய தேஜஸ்வி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Singapore ,Patna ,Tannidhi ,
× RELATED ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில்...