×

சென்னையில் 300 தூர்வாரும் இயந்திரங்கள், 177 ஜெட்ராடிங் இயந்திரங்கள் மூலம் மழைநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் பணிகள் தீவிரம்: குடிநீர் வாரியம் தகவல்

சென்னை: சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில், 300 தூர்வாரும் இயந்திரங்கள், 177 ஜெட்ராடிங் இயந்திரங்கள் மற்றும் 60 கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் மூலம் மழைநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில், 300 தூர்வாரும் இயந்திரங்கள்,  177 ஜெட்ராடிங் இயந்திரங்கள் மற்றும் 60 கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் மூலம் மழைநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் பணிகள் 2000 களப்பணியாளர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட  15 மண்டலங்களிலும் பேரிடர் கால நிவாரணப் பணிகள் மேற்கொள்ளும் வகையில்  15 கண்காணிப்பு பொறியாளர்கள் தலைமையில் 15 செயற்பொறியாளர்கள் மற்றும் 156 உதவிப் பொறியாளர்கள் ஒருங்கிணைப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு  பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து பகுதி அலுவலகங்களிலும் இரவு நேரங்களில் களப்பணிகளை கண்காணிப்பதற்காக 15 செயற்பொறியாளர்கள் சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மழைக்காலங்களில் பதினைந்து பகுதி அலுவலகங்களிலும் துணை பகுதிப் பொறியாளர் தலைமையில் உதவிப் பொறியாளர் மற்றும் தேவையான பணியாளர்கள், இயந்திரங்கள் கொண்ட சிறப்பு இரவுப் பணிக் குழு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. கழிவுநீர் குழாய்கள், குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் கழிவுநீர் குழாய் இணைப்புகளில் ஏற்படும் அடைப்புகளை சரிசெய்ய ஏதுவாக  300 தூர்வாரும் இயந்திரங்கள், 177 ஜெட்ராடிங் இயந்திரங்கள் மற்றும் 60 கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் ஆக மொத்தம் 537 வாகனங்கள் மழைநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 321 எண்ணிக்கையிலான கழிவுநீர் நீரேற்று நிலையங்கள் மூலம் கழிவுநீர் உறிஞ்சப்பட்டு 5 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு முறையாக வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், குடிநீர் குழாய்களில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கழிவுநீர் செல்லும் பிரதான குழாய்களில் தூர்வாரும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது அடைப்பு ஏதும் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் தொடர் கண்காணிப்பு   பணிகள்    நடைபெற்று   வருகிறது. இந்நிலையில், பொதுமக்கள் கீழ்கண்ட எண்களில்  தொடர்பு கொண்டு மழைநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான புகார்களை தெரிவிக்கும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.புகார் பிரிவு எண்    044-45674567 (20 இணைப்புகள்)    கட்டணமில்லா தொலைபேசி எண்    1916    மழைக்காலங்களில் குடிநீர் விநியோக நிலையங்களில் தேங்கும் மழைநீரினை இறைக்க 16 பெரிய நீர் உறிஞ்சும் இயந்திரங்கள் மற்றும் 92 சிறிய நீர் உறிஞ்சும் இயந்திரங்கள் உள்ளது.  மேலும், பகுதி 9ல் (தேனாம்பேட்டை) ஊர்தியின் மேல் பொருத்தப்பட்ட நீர் உறிஞ்சும் இயந்திரம் ஒன்று உள்ளது. அனைத்து குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோக நிலையங்களிலும், உள்ள இயந்திரங்கள் மற்றும் ஜெனரேட்டர்கள் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு இயங்கி வருகின்றன. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரினை அகற்ற 196 இடங்களில் நீரிறைக்கும் மோட்டார்கள் பொருத்தப்பட்டு உடனுக்குடன் பொதுமக்களின் புகார்கள் சரிசெய்யப்பட்டு வருகிறது.  கழிவுநீர் உந்து நிலையங்களில் 247 ஜெனரேட்டர் இயந்திரங்கள் மற்றும் 87 வாடகைக்கு அமர்த்தப்பட்ட ஜெனரேட்டர் இயந்திரங்கள் ஆக மொத்தம் 334 ஜெனரேட்டர் இயந்திரங்கள் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு (ம) குடிநீர் விநியோக நிலையங்களில் 101 ஜெனரேட்டர் இயந்திரங்கள் செயல்பாட்டில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post சென்னையில் 300 தூர்வாரும் இயந்திரங்கள், 177 ஜெட்ராடிங் இயந்திரங்கள் மூலம் மழைநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் பணிகள் தீவிரம்: குடிநீர் வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Drinking Water Board ,Chennai Drinking Water Board ,
× RELATED ஜூன் 2 வரை சென்னை, தாம்பரம்...