ஹீரோயினாகும் எஸ்தர்

மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் நடிப்பவர், எஸ்தர் அனில். 2010ல் மலையாளத்தில் ஜெயசூர்யா நடித்த ‘நல்லவன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 2013ல் மோகன்லாலின் ‘திரிஷ்யம்’, பிறகு அதன் தொடர்ச்சியான ‘திரிஷ்யம் 2’ உள்பட சில படங்களில் நடித்தார். தெலுங்கில் உருவான ‘திரிஷ்யம்’ படத்தின் ரீமேக்குகளிலும் நடித்துள்ள எஸ்தர் அனில், 2015ல் கமல்ஹாசன், கவுதமி நடிப்பில் வெளியான ‘திரிஷ்யம்’ முதல் பாகத்தின் ரீமேக்கான ‘பாபநாசம்’ படத்தில் நடித்திருந்தார்.

 தற்போது ‘குறளி’ என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். ஏற்கனவே ‘விஸ்வாசம்’ அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக இருந்து ஹீரோயினாக உயர்ந்தது போல், இப்போது எஸ்தர் அனிலும் ஹீரோயினாக மாறியுள்ளார்.

Related Stories: