ஹன்சிகா ரீ-என்ட்ரி

இந்தியில் கடந்த 2003ல் வெளியான ‘ஹவா’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஹன்சிகா, தொடர்ந்து இந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் 49 படங்களில் நடித்துள்ளார். அவரது 50வது படம்  ‘மஹா’ தமிழில் உருவாகியுள்ளது. இதில் அவர் ‘வாலு’ படத்தை தொடர்ந்து தனது முன்னாள் காதலன் சிம்புவுடன் நடித்துள்ளார் என்றாலும், ஷூட்டிங்கில் காட்சிகளுக்கான வசனங்களுக்கு மேல் ஒரு வரி கூட அவர்கள் தங்கள் பழைய வாழ்க்கையைப் பற்றி பேசியதில்லை என்கிறார்கள்.

இதையடுத்து தெலுங்கில் ‘105 மினிட்ஸ்’, ‘மை நேம் இஸ் ஸ்ருதி’, தமிழில் ‘பார்ட்னர்’, ‘ரவுடி பேபி’ ஆகிய படங்களில் நடிக்கும் ஹன்சிகா, இந்த ரீ-என்ட்ரியை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பலர் அட்வைஸ் செய்துள்ளனர்.

Related Stories: