×

புதுப்பொலிவு பெறும் தழுவிய மகாதேவர் கோயில் தெப்பக்குளம்: பக்தர்கள் மகிழ்ச்சி

நாகர்கோவில்: நாகர்கோவில் வடசேரியில் பழமையான தழுவிய மகாதேவர் கோயில் தெப்பக்குளம் தூர்வாரப்பட்டு வருவது பக்தர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. நாகர்கோவில் வடசேரி பகுதியில் அமைந்துள்ள மிக பழமையான கோயில் தழுவிய மகாதேவர் கோயில் ஆகும். பழையாற்றின் கரையில் இந்த கோயில் அமைந்துள்ளது. சுசீந்திரம் தாணுமாலையசுவாமி கோயிலுக்கும் முந்தைய கால கட்டத்தில் கட்டப்பட்ட கோயிலாக இந்த கோயில் கருதப்படுகிறது. இந்த கோயில் சித்தர்களால் பூஜிக்கப்பட்ட கோயில் எனவும் பெயர் பெற்றதாகும். திருவிதாங்கூர் சமஸ்தான காலத்தில் இந்த கோயிலில் சிறப்பான பூஜைகளும், திருவிழாக்களும் நடந்து வந்தன. தற்போது இந்த கோயில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறைக்கு கீழ் உள்ளது. இந்த கோயிலில் பின்புறம் தெப்பக்குளம் உள்ளது.இந்த தெப்பக்குளத்தில் இருந்து தினமும் ஒரு பெண், குவளையில் இருந்து தண்ணீர் எடுத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்ய முயன்றார். ஆனால் குவளை உடைந்து தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலை இருந்தது. தினமும் இவ்வாறு நிகழ்ந்ததால் அந்த பெண் மனமுடைந்து குளத்துக்குள் விழுந்து உயிரை மாயக்க முயன்றார். அவரை மகாதேவர் தழுவி, உயிர் கொடுத்ததால், தழுவிய மகாதேவர் என அழைக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள். இந்த குளம் நாளடைவில் பராமரிப்பு இல்லாமல் போனது.இந்த குளத்தை சீரமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் திமுக அரசு பொறுப்பேற்றதும், பழமையான திருக்கோயில்களில் புனரமைப்பு பணிகள், திருப்பணிகள்  செய்ய நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி கடந்த சில வாரங்களுக்கு முன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், 12 வது வார்டு பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது இந்த வார்டு கவுன்சிலர் சுனில் அரசு உள்ளிட்ட பக்தர்கள், கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று, தெப்பக்குளம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் மகேஷ் உறுதி அளித்தார். அதன்படி ரூ.7 லட்சம் செலவில் தெப்பக்குளத்தை தூர்வாரும் பணி நடக்கிறது. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிகள்  நடைபெற்று வருகின்றன. இந்த பணியை மாநகராட்சி இன்ஜினியர் பாலசுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். குளத்தை தூர்வாரி, கரைகள் சீரமைக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். தெப்பக்குளம் தூர்வாரப்பட்டு வருவது பக்தர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது….

The post புதுப்பொலிவு பெறும் தழுவிய மகாதேவர் கோயில் தெப்பக்குளம்: பக்தர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Mahadev Temple ,Theppakulam ,Nagercoil ,Mahadeva ,Vadaseri ,Nagercoil… ,
× RELATED நாட்டரசன்கோட்டையில் கோயில் தெப்பக்குள நீர் வெளியேற்றம்