சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் நேற்றும் வருகை, புறப்பாடு என மொத்தம் 19 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை 14 விமானங்கள் தரையிறங்க முடியாமல் பெங்களூர், ஐதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன. மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை வந்த 14 விமானங்கள் தரையிறங்க முடியாமல் பெங்களூர், ஐதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன. இதில் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை சிங்கப்பூர், இந்தூர், மும்பை உட்பட 9 விமானங்கள், நேற்று அதிகாலை துபாய், தோகா உள்பட 5 விமானங்கள் என மொத்தம் 14 விமானங்கள் அடங்கும். இந்த விமானங்கள் நேற்று அதிகாலை முதல் சென்னைக்கு திரும்பியது. இந்நிலையில், நேற்று 2வது நாளாக புயல் எதிரொலி காரணமாக 11 புறப்பாடு விமானங்கள், 8 வருகை விமானங்கள் என மொத்தம் 19 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னையில் இருந்து நேற்று காலை கோலாலம்பூர் செல்லும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், உள்நாட்டு விமானங்களான திருவனந்தபுரம், விஜயவாடா, விசாகப்பட்டினம், கோவை, தூத்துக்குடி, பெங்களூர், ராஜமுந்திரி உள்பட 11 விமானங்களின் புறப்பாடு, 8 விமானங்களின் வருகையும் ரத்து செய்யப்பட்டன. இதில் ஏடிஆர் என அழைக்கப்படும் 72 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானங்கள் அடங்கும். இவை புயல் காற்று வீசினால் பலத்த சேதத்துக்கு உள்ளாகும். புயல் கரையை கடக்கும்வரை ஏடிஆர் ரக விமான சேவைகளை நிறுத்தி வைக்கும்படி விமான போக்குவரத்து பாதுகாப்பு துறையினர், சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்….
The post மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் 19 விமானங்கள் ரத்து; பயணிகள் கடும் அவதி appeared first on Dinakaran.
