×

சென்னையில் உள்ள அம்மா உணவகத்தில் புது உணவு பட்டியல்; மேயர் பிரியா தகவல்

சென்னை: சென்னையில் உள்ள அம்மா உணவகத்தில் புதிதாக உணவு பட்டியலை சேர்க்க மாநகராட்சி திட்டமிட்டு வருவதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தகவல் தெரிவித்துள்ளார்.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அம்மா உணவகம் திறக்கப்பட்டது. சென்னையில் முதலில் தொடங்கப்பட்ட இத்திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் விரிவுபடுத்தப்பட்டது. ஆனால் அவரது மறைவிற்கு பிறகு இந்தத் திட்டத்தில் லாப, நஷ்டம் பார்க்க ஆரம்பித்தது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு. அப்போதே  நஷ்டம் ஏற்பட்டதால் சில உணவகங்கள் மூடப்பட்டது என்று எடப்பாடி பழனிசாமி அரசு  கூறியது.  இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற போது, கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்கள் முடக்கப்பட்டதோடு, பல திட்டங்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஆனால்,  முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினோ, அம்மா உணவகம் தொடரும் என்றதோடு, அம்மா என்ற பெயரிலேயே இத்திட்டம் தொடர்ந்து நடத்தப்படும் என்று அறிவித்தார். இருந்தாலும் பல இடங்களில் அம்மா உணவகம் மூடப்படும் என பேச்சு எழும்பியது. இதற்கு பதிலளித்த சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, அம்மா உணவகம் மூடப்படும் என பொய்யான தகவல் பரவி வருகிறது. நாங்கள் அம்மா உணவகத்தை மேம்படுத்த யோசனை செய்து வருகிறோம்.உணவு வகைகளை  மேம்படுத்துவது குறித்து மக்களுடன் கலந்தாலோசித்து வருகிறோம், நாங்கள் மெனுவில் பீன்ஸ், சென்னா போன்ற சில சத்தான உணவு வகைகளை  சேர்க்கலாம் என முடிவு செய்திருக்கிறோம், மேலும் சில உணவு வகைகள்  சில பகுதிகளில் நன்றாக விற்கப்படுவதால், அதனை மாற்றம் செய்ய தேவையில்லை. 350க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்களில்  ஒரு நாளைக்கு 100க்கும் குறைவானவர்களே வருகிறர்கள். 500க்கும் குறைவாக வருமானம் ஈட்ட கூடிய  35 அம்மா உணவகம் அடையாளம் கண்டுள்ளது. இந்த அம்மா உணவகத்தை பரபரப்பான பகுதிகளுக்கு மாற்ற விரும்புகிறோம். தினசரி வருவாயை 1,000 எட்டுவதே எங்கள் நோக்கம். ஒரு போதும் அம்மா உணவகம் மூடப்படாது’’என்றார்….

The post சென்னையில் உள்ள அம்மா உணவகத்தில் புது உணவு பட்டியல்; மேயர் பிரியா தகவல் appeared first on Dinakaran.

Tags : Mom Restaurant ,Chennai ,Mayor ,Priya ,Chennai Corporation ,Dinakaran ,
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!