×

அரியலூரில் போலீசார் தாக்கியதில் விவசாயி பலி பிரேத பரிசோதனைக்கு மருத்துவர்கள் குழு நியமனம்; சென்னை உயர் நீதிமன்றaம் உத்தரவு

சென்னை: அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீசில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக  அருண்குமார் என்பவரை தேடி  காசங்கோட்டையைச் சேர்ந்த விவசாயி செம்புலிங்கம் என்பவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், அங்கு செம்புலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் கடுமையாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. கடந்த நவம்பர் 25ம் தேதி நடந்த இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த செம்புலிங்கம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி டிசம்பர் 8ம் தேதி மரணமடைந்தார். போலீசாரின் தாக்குதலில் செம்புலிங்கம் இறந்ததால், இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி, செம்புலிங்கத்தின் உறவினர் கார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவில், மாநில போலீசார் சம்பந்தப்பட்டுள்ள இந்த வழக்கை அவர்களே விசாரித்தால் நியாயம் கிடைக்காது. தடயவியல் மருத்துவ துறை நிபுணர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்யுமாறும், அதை வீடியோ பதிவு செய்யுமாறும் உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. ஆனால், கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு உள்ளிட்ட வழக்குகளில் தங்கள் தரப்பு மருத்துவர்களை வைத்து பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் நிராகரித்துள்ளதாக காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு வழக்கறிஞர் சந்தோஷ் வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, தஞ்சை, திருச்சி, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் டீன்கள் பரிந்துரைக்கும் மருத்துவர்கள் அடங்கிய குழு மூலம் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும். வீடியோ பதிவு செய்ய வேண்டும். நாளை (இன்று) 12 மணிக்குள் பிரேத பரிசோதனையை முடித்து உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும். நான்கு வாரங்களில் தமிழக அரசும், போலீசும் பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்….

The post அரியலூரில் போலீசார் தாக்கியதில் விவசாயி பலி பிரேத பரிசோதனைக்கு மருத்துவர்கள் குழு நியமனம்; சென்னை உயர் நீதிமன்றaம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Madras High Court ,Chennai ,Kasangottai ,Arunkumar ,Vikramangalam ,
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்களில்...