×

ஆடு திருடிய கல்லூரி மாணவர்கள் கம்பத்தில் கட்டிவைத்து தர்ம அடி

கோபி:  ஈரோடு மாவட்டம் கோபி அருகே அயலூர், சன்னகுழிமேட்டை சேர்ந்தவர் நாச்சிமுத்து (36). மரம் ஏறும் தொழிலாளி. இவரது மனைவி கவுரி (32). இவர்கள் நேற்று மேய்ச்சலுக்கு சென்ற ஆடு, மாடுகளை பிடித்து வீட்டின் முன்பு கட்டிவிட்டு சாப்பிட சென்றனர். சிறிது நேரத்தில் ஆடு கத்தும் சத்தம் கேட்டது. கவுரி வெளியே வந்து பார்த்தபோது ஆட்டை 2 வாலிபர்கள் பைக்கில் திருடிச்செல்வது தெரியவந்தது. கவுரி சத்தம் போடவே அப்பகுதியினர் திரண்டு அந்த வாலிபர்களை விரட்டிப்பிடிக்க முயன்றபோது நிலைதடுமாறி  விழுந்தனர். இதனையடுத்து பொதுமக்கள் அவர்களை மடக்கிப்பிடித்து ஆட்டை மீட்டனர். பிடிபட்ட வாலிபர்களை மின் கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். தகவல் அறிந்ததும் சிறுவலூர் போலீசார் வந்து வாலிபர்களை கைது செய்து நடத்திய விசாரணையில் திருப்பூர் மாவட்டம் அங்கேரிபாளையத்தை சேர்ந்த சபரி (20),  பாலாஜி ஆனந்த கீதன் (20) என்பதும், கல்லூரி மாணவர்கள் என்றும் தெரிய வந்தது.  ரூ.2 லட்சத்தில் பைக் வாங்கி கொடுத்தால்தான் கல்லூரிக்கு செல்வேன் என சபரி பெற்றோரிடம் அடம்பிடிக்கவே ஆட்டோ டிரைவரான அவரது தந்தை கடந்த மாதம்தான் புதிய பைக்  வாங்கி கொடுத்துள்ளார். குடிபோதையில் சாலையில் சாகசத்தில் ஈடுபட்டபோது நொறுங்கிய பைக்கை சரி செய்வதற்காக ஆட்டை திருடியது தெரியவந்தது….

The post ஆடு திருடிய கல்லூரி மாணவர்கள் கம்பத்தில் கட்டிவைத்து தர்ம அடி appeared first on Dinakaran.

Tags : Gobi ,Channaguzhimet, Ayalur ,Erode district ,
× RELATED பேருந்து நிலையத்தில் கோபி நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு